Monday, May 28, 2007

அடுத்த படம்

இன்றைய அரசியல் சூழ்நிலைகளை வைத்து பட டைரக்டர்ஸ் படம் எடுத்தால் என்ன படம் எப்படி எடுப்பார்கள்.

டைரக்டர்: சரவணசுப்பையா
நடிகர்: அஜித்
படம்: season
கதை: 2000 வருடங்களுக்கு முன்பு இருந்த பாலம் உலகவரை படத்துல இருந்து திடிர் என்று காணாமல் போய்விட்டுகிறது. அது எப்படி என்று கண்டுபிடிப்பதுதான் கதை கரு.


டைரக்டர்: சிலம்பரசன்
நடிகர்: சிலம்பரசன்
படம்: கண்றாவி கருமம்
கதை: M.L.A ஒருவர் ஊர்ல இருக்குற எல்லா நர்ஸையும் கடத்தி கடத்தி கொலை செய்கிறார், ஏன் எதற்க்கு என்று கண்டுபிடிப்பது தான் கதை.

டைரக்டர்: லிங்குசாமி
நடிகர்: விக்ரம்
படம்: பாம்மா!
கதை: திருமணபத்திரிக்கை அடிக்கும் ஆபிஸ் எரிக்கபடுகிறது அது ஏன் எதற்க்கு என்று கதாநாயகன் கண்டு பிடிக்கு போகிறார் அதில் பல பெருங்கைகள்,சில அல்ல கைகள் அதில் ஈடுப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. பயந்து ஜகா வாங்குகிறார இல்லை பந்தாடுகிறாரா..முடிவு 30 வருடங்களுக்கு பிறகு.

கதை டிஸ்கஸனில் நடக்கும் கூத்து விரைவில்...

Tuesday, May 22, 2007

கோவையின் தமாசு தமாசு


செய்தி: விடுதலைப்புலிகளை பற்றி பேசக்கூடாது என மிரட்டினால் அதிகமாக பேசுவோம்- கோவை கோமாளி ஆவேசம்.


அடேங்கப்பா இந்த கோவை கோமாளி செய்யுற அலப்பறைக்கு அலவே இல்லாம போச்சு பா. தூக்கி ஒன்றரை வருடம் சிறையில் போட்டு களி திங்க வைத்த பின்பும், சர்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக எல்லாரையும் கூட்டி கொண்டு நடை பயிற்சி போன போது எல்லாம் இப்படி ஆவேசமா பேசமுடியாத எலி இப்பொழுது தாத்தா மூக்கில் வாலை விட்டு ஆட்டுகிறது, ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சிங்கம் சுனங்கிடுச்சினா எலி மூக்குல வால விட்டு ஆட்டுமாம் என்று. கொஞ்ச மாதங்களுக்கு முன்பு வரை நீ ஊருக்கு வருகிறாய் என்றால் சேது சமுத்திர நாயகனே என்று போஸ்டர் அடித்து ஒட்டுவார்களே , இப்ப எங்கங்கயா அந்த போஸ்டர் போச்சு? அம்மா எதிர்கிற திட்டம் என்பதால் அது பற்றி மூச்சு விடாத நீ இன்று இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறாய், என்ன காமெடியா இது உள்ளூர் தமிழர்களுக்கே குரல் கொடுக்க முடியவில்லையாம், இவரு இலங்கை தமிழர்களுக்காக போராட போகிறாராம்... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக போறாராம்.

Sunday, May 20, 2007

சென்னை வந்த ராமன்


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.

Saturday, May 19, 2007

பழய தயாநிதி


அம்மா வர்றாங்க

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிக்கவும்

Thursday, May 17, 2007

விளம்பரம்


கருணாஸ் ஹீரோவாக நடித்து (பக்கதுல ஓடி வர்ற தம்பி பேரு தெரியலைங்க),வெளிவரும் "நினைத்து நினைத்து பார்த்தேன்" படம் வெற்றி பெறவாழ்த்துவது உங்கள் குசும்பன்.

Monday, May 14, 2007

டென்டுல்கர்


செய்தி: டென்டுல்கர் பயிற்ச்சியின் போது காயம்!

அன்று: ஐய்யயோ! அப்ப அடுத்த மேட்ச் விளையாட மாட்டாரா?

இன்று: ஐய்யா! அப்ப அடுத்த மேட்ச் விளையாட மாட்டார்!!!