Sunday, July 1, 2007

இது எப்படி!!! உங்கள் பார்வைக்கு

கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் ...(இது நான் தூங்கும் பொழுது விடும் குறட்டை) இப்ப காயத்ரி என்ன செய்யுறாங்க எனக்குள் ஒரு கவிஞன் குப்புற படுத்து தூங்குறானான்னு டெஸ்ட் செய்யுறாங்க. ஆனா அவன் மல்லாக்க படுத்து தூங்குகிறான் (அப்ப அவன் கவிஞனா இல்லையா அத அவர்கள் முடிவுக்கே விட்டுவிடுவோம்???) அவுங்க எதுக்கும் அவன எழுப்பி கிளாஸ் எடுக்குறாங்க.( சீசீ...அந்த கிளாஸ் இல்லப்பா) இது வேற படிப்பு சம்பந்த பட்டது...

அதன் பிறகு அவனிடம் நிறைய மாற்றம்...

கவிதாயினி காயத்ரி அவர்கள் ஆதரவுடனும் , சிபி, கீழ்மத்தூர் எக்ஸ்பிரஸ் மகியின் ஆசியுடனும், மேலும் அய்யனார், இளா, குருட்டு புலி இராம், மின்னல்
வாழ்த்துகளுடன் இதோ ஒரு அரிய படைப்பு...

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் சென்னை
அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு சென்னை
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் சென்னை
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் சென்னை
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள்

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் சென்னை
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் சென்னை
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்

சும்மா கிடந்த என்ன சிபியும், மகியும் எழுப்பி விட்டுட்டாங்க... திட்டுகள் குட்டுகள் எல்லாம் அவர்களுக்கே சமர்பனம்...காயத்ரியும் திட்டனும் போல ஆசையா இருந்தா
நீங்க திட்டலாம் அதையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

25 comments:

said...

நீயுமாய்யா....

said...

நீங்களுமா ? இப்பத்தான் 'தம்பி' இப்டி ஒரு செய்யுளை எடுத்துப் போட்டிருக்காரே,அவருக்கு என்னாச்சோன்னு நினைச்சேன் :-)

நல்லா இருங்க ;-)

சரி இந்த 'அரிய படைப்பு' மண்டபத்துல யாராவது குடுத்ததா இல்ல உங்களுக்குள்ள 'மல்லாக்கப் படுத்திருக்கற' கவிஞன் எழுதினதா ?

said...

மின்னுது மின்னல் said...
நீயுமாய்யா....

ஆமா மின்னல் முல்ல முல்லாலதான் எடுக்கனும் அதுபோல...

said...

கதிரவன் said...
நீங்களுமா ? இப்பத்தான் 'தம்பி' இப்டி ஒரு செய்யுளை எடுத்துப் போட்டிருக்காரே,அவருக்கு என்னாச்சோன்னு நினைச்சேன் :-)


மூனு நாளைக்கு முன்னாடி இத துர்கா கிட்ட காட்டினேன் ஓடி போய்ட்டாங்க அதன் பிறகு இன்னைக்குதான் நேரம் வந்துச்சு அதுக்குள்ள தம்பி போட்டுவிட்டார்..

நல்லா இருங்க ;-)


சரி இந்த 'அரிய படைப்பு' மண்டபத்துல யாராவது குடுத்ததா இல்ல உங்களுக்குள்ள 'மல்லாக்கப் படுத்திருக்கற' கவிஞன் எழுதினதா ?

அது மட்டும் ரகசியம்!!!!

Anonymous said...

அடச்சே இது குற்றாலக் குறவஞ்சிதன

நன்றி எனக்குள்ள இருந்த எலக்கியவாதிய தட்டி எழுப்புனதுக்கு

said...

ஆமா மின்னல் முல்ல முல்லாலதான் எடுக்கனும் அதுபோல...
//

முள்ள ஊசியால எடுத்தா தப்பா..?

said...

முள்ள ஊசியால எடுத்தா தப்பா..?

தப்பே இல்ல ஆயிரம் பேருக்கு நல்லது நடக்கும்ன்னா காலேயே எடுக்குறது கூட தப்பு இல்ல..(யார் கால என்று புரியுதுதானே மின்னல் :))))

said...

நல்ல பாட்டு இது!

குற்றாலக் குறவஞ்சில வரும்!

இது ஏன் குசும்புல வந்தது?

said...

சங்கத்தில ஒங்களையும் சேத்தாச்சில்ல இனிமே இப்படித்தான் எழுதனும்

said...

தப்பே இல்ல ஆயிரம் பேருக்கு நல்லது நடக்கும்ன்னா காலேயே எடுக்குறது கூட தப்பு இல்ல..(யார் கால என்று புரியுதுதானே மின்னல் :))))
//

சிபி காலனு நான் சொல்லி தற்கொலை பண்ண நான் என்ன குசும்பனா...:)

said...

நாமக்கல் சிபி said...
"இது ஏன் குசும்புல வந்தது? "

ஒன்னும் தெரியாத பாப்பா இவரு!!!

said...

தலைவா...எனக்கு எதுக்கு இந்த பதிவின் linkஜ அனுப்பிவச்சிங்க ?

said...

அதி கால கேள்விப்பட்டிருக்கிறேன்!

அது என்ன மின்னல் சிபி கால?

said...

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எல்லாருக்கும்?

said...

//ஒன்னும் தெரியாத பாப்பா இவரு!!! //

இதை நான் வழிமொழிகிறேன்!

said...

லொடுக்கு said...
என்னய்யா ஆச்சு இன்னிக்கு எல்லாருக்கும்?

இது இன்னைக்கு ஆரம்பிச்சது இல்ல என்னைக்கு சிபி கவுஜ எழுத ஆரம்பிச்சாரோ அன்னைக்கு ஆரம்பிச்சது..

said...

கோபிநாத் said...
தலைவா...எனக்கு எதுக்கு இந்த பதிவின் linkஜ அனுப்பிவச்சிங்க ?

எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வையோடதான்...

said...

எங்கிருந்துப்பா எப்படியெல்லாம் புடிக்கிறீங்க? தம்பி செய்யுளை அய்யனார் விளக்கினால், உங்க செய்யுளை தம்பி கதிர் விளக்குவார்.

said...

//எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வையோடதான்... //

ஓ உங்களுக்கு தூரப்பார்வையா?

said...

ஜெஸிலா said...
எங்கிருந்துப்பா எப்படியெல்லாம் புடிக்கிறீங்க? தம்பி செய்யுளை அய்யனார் விளக்கினால், உங்க செய்யுளை தம்பி கதிர் விளக்குவார்.

வரட்டும் வரட்டும் யாரும் விளக்க முடியாத படி செய்யுள் எல்லாம் வச்சு இருக்கோம்...

said...

//எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வையோடதான்...//

தொலை நோக்குப் பார்வையா? அல்லது

கொலை நோக்குப் பார்வையா?

(கொலைதான் உங்களுக்குப் பார்வையா?)

said...

அய்யய்யோ! எனக்கும் இந்த கொடுமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என்னை நம்புங்க ப்ளீஸ்ஸ்ஸ்

said...

enkenai enna nadakuthu

said...

enkenai enna nadakuthu

Anonymous said...

kappi adicha kavithaikku ippadi oru varaverpa. nalu vari kavithaikke ayyanaru pattalathoda odipponar. Idhai ayyanar pakkathila kooda eduthuttu poga mudiyathu. ponal kavithati kaanama poyividum.

NISUMBAN