Sunday, January 20, 2008

கமலஹாசனையே நேரில் கலாய்த்த பதிவருடன் ஒரு பேட்டி!!!

நம் வலைபதிவர் ஒருவர் கமலஹாசனையே நேரில் கலாய்த்து இருக்கிறார் அவர் யார்? இதுவரை சத்தமே இல்லாமல் இது போல் ஒரு சாதனையை செய்துவிட்டு நம்மோடு உலாவி இருக்கிறார்.

அவர் தான் பொடியன் என்கிற சஞ்ஜெய் இனி அவருடன் ஒரு பேட்டி!!!

சீனா தாத்தா: ஹலோ மிஸ்டர் சஞ்செய் நேற்று நீங்க போட்ட குரல் "சோதனை" பதிவு பலரையும் சோதனை செய்துவிட்டதாக எல்லோரும் பேசிக்கிறாங்களே அது பற்றி உங்கள் கருத்து?

பொடியன்: உலகம் ஆயிரம் சொல்லும் என்னால் பல டாக்டர் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது அது உங்களுக்கு தெரியுமா?

சீனா தாத்தா: அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே எப்படி?

பொடியன்: நேற்று என் குரல் பதிவை கேட்ட பலருக்கு காது அடைப்பு ஏற்பட்டது அதை நீக்க டாக்டரிடம் தானே செல்லவேண்டும்!!!

சீனா தாத்தா: (அடைப்பு வந்தா அதுக்காக காவா அடைப்பு எடுப்பவனையா கூப்பிடமுடியும்) ஹோ சரி சரி! நீங்க உங்க பதிவில் நீங்க பேசும் பொழுது நீங்களே காதை பொத்திக்கிட்டு பேசுவதாக சொல்லி இருக்கீங்க ஆனா எதிரே இருப்பவர்கள் மூக்கை பொத்திக்கிறார்களே ஏன்?

பொடியன்: நோ கமெண்ட்ஸ்

சீனா தாத்தா: நீங்களும் வினு சக்கரவர்தியும் சொந்தமா? உங்கள் குரல் அவர் குரல் போல் அப்படியே இருக்கிறதே!

பொடியன்: ஆமாம் அவர் மட்டும் அல்ல T.ராஜேந்தர் கூட சொந்தம்.

சீனா தாத்தா: உங்கள் குரல் வளத்தை மெயின் டெயின் செய்ய என்ன என்ன செய்வீர்கள்?

பொடியன்: தினம் ஒரு கிலோ பிளேடு, ஒரு கிலோ ஆணி அரைச்சு சாப்பிட்டு விட்டு அதை 10 எருமைகளோடு கழுத்தளவு தண்ணியில் நின்னு உய் உய்ன்னு கத்துவேன் தானா அதுபோல் இனிய குரல் வந்துடும்!

சீனா தாத்தா: இவ்வளோ திறமை இருக்கிற நீங்கள் ஏன் திரைப்படத்தில் பாட கூடாது?

பொடியன்: நான் ஒரு படத்தில் பாடி கமலையே கலாய்த்து இருக்கிறேன்!

சீனா தாத்தா: அப்படியா இதுவரை யாருக்குமே தெரியாதே, நீங்களும் சொல்லவே இல்லை! எந்த படத்தில்? எப்பொழுது?

பொடியன்: எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது அதான்!

சீனா தாத்தா: பரவாயில்லை சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்!

பொடியன்: 16 வயதினிலே படத்தில் கமல் Sri தேவியோடு நடந்து போகும் பொழுது ஒரு பாட்டு பாடுவார், அவர் பாடும் பொழுது நான் தான் எதிர் குரல் கொடுத்து கலாய்த்து இருப்பேன் அதுக்கு Sri தேவி செமயா சிரிப்பாங்க, திரும்ப கமல் பாட முயற்சி செய்வார் நானும் விடாம கலாய்பேன்! அப்படி குரல் கொடுத்து கமலையே கலயாத்தவன் இந்த பொடியன் தெரிஞ்சுக்குங்க!!! என்ன பாட்டு என்று இப்பயாச்சும் புரிஞ்சுதா!!! அது என்ன பாட்டு என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன் உங்களுக்கு ஒரு பாட்டு பாடி காட்டுறேன்!!!

சீனா தாத்தா: பல்செட்டை கழட்டி விட்டு வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

29 comments:

said...

மிக நல்ல பதிவு!

ஆழமான கருத்துக்கள்!

அருமையான சிந்தனைகள்!

said...

ஆ..சீனா சார்..என்ன நடக்குது இங்கே..

said...

// மங்களூர் சிவா said...
மிக நல்ல பதிவு!

ஆழமான கருத்துக்கள்!

அருமையான சிந்தனைகள்!///

வலைசர ஆசிரியர் சொன்னா சரிதாங்கோ!!!

***********************
பாச மலர் said...
ஆ..சீனா சார்..என்ன நடக்குது இங்கே..///

சீனா சாரா? அவ்வ்வ் என்ன இது எத்தனை முறை பதிவில் சீனா தாத்தா சீனா தாத்தான்னு சொல்லி இருக்கேன் அப்படி சொல்லுங்க!!!

said...

//சீனா தாத்தா: பல்செட்டை கழட்டி விட்டு வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

குசும்பன்,

இப்ப யாரை கலாய்ச்சிங்க ?

புரியல்ல, தயவு செய்து விளக்கவும் ®

said...

//கோவி.கண்ணன் said...
குசும்பன்,

இப்ப யாரை கலாய்ச்சிங்க ?

புரியல்ல, தயவு செய்து விளக்கவும் ®///

நான் சும்மா வெறும் அவ்வ்வ் என்று மட்டும்தான் எழுதி இருந்தேன் தாத்தா கோவி சார்தான் சும்மா அப்படி இருந்தா நல்லா இருக்காது பல் செட்டை கழட்டி என்று சேர் என்று சொன்னார் நான் முடியாது தாத்தா புகழுக்கு சிறு இழுக்கு என்றாலும் அதை நான் செய்ய முடியாது என்றேன். இல்லை என்றால் என் பல்லை அடித்து உடைத்துவிடுவேன் என்று அவர் மிரட்டியதால் அப்படி எழுதிவிட்டேன்! ஆனால் நல்ல பிள்ளை போல் இங்கு என்னை போட்டு கொடுக்கிறார்!!! நீங்கள் என்னை நம்புவீர்கள் என்று எனக்கு தெரியும்:)

said...

சீனா தாத்தா சீனா போய் வந்திருப்பார், குங்க்பூ தெரிந்திருக்கும் ஜாக்கிரதை !

Anonymous said...

சீனா தாத்தாவுக்காக ஒரு பாட்டு.

சிரிச்சு சிரிச்சு வந்தால் சீனா தானா ? டோய் !

said...

அண்ணே வாழ்க ;)

said...

//கோவி.கண்ணன் said...
சீனா தாத்தா சீனா போய் வந்திருப்பார், குங்க்பூ தெரிந்திருக்கும் ஜாக்கிரதை !///

நம்ம ஊர் குஷ்பூ போல அங்கு குங்பூ போல தாத்தா பொண்ணு எப்படி இருக்கும் என்றால் சொல்லிட போறார்:))

******************
ரகசியா தாத்தா வயசு ஆனவர் அவரை இப்படி எல்லா பாட்டு பாடி அசைக்கமுடியாது!
**************************
கோபி எனி பிராபிளம்:))

said...

//
குசும்பன் said...

வலைசர ஆசிரியர் சொன்னா சரிதாங்கோ!!!
//
அதெல்லாம் முடிஞ்சி போச்சு கதம் கதம் அதுதான் வர்ட்டான்னு பெரிய போஸ்ட் போட்டாச்சில்ல!!

said...

ஐயா சரவணா, இனிமே உங்க ஜிமெயில் ஸ்டேடஸ் பார்த்துட்டு உங்க பக்கமே வரக்கூடாதுனு முடிவுபண்ணிட்டேன். மொக்கையோ மொக்கை. தாங்கல சரவணா.

said...

பதினாறு வயதினிலே படத்தில் வரும் அந்த பாடல்:

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு என்ற பாடலில் கடைசி வரிகள் தானே!

said...

எனக்கொரு உதவி செய்ய முடியுமா?
என் ப்ளாக் http://boochandi.blogspot.com
என் மெயில்: sathya.narayanantv@gmail.com

என் முதல் ஒன்றிரெண்டு பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிந்தன.

ஆனால், அதற்கு பிறகு எந்த பதிவும் தெரிவதில்லை. தமிழ்மணத்தில்

'மறுமொழி திரட்டப்படுவதில்லை' என்று வருகிறது.

தமிழ்மணத்திற்கும் 'adm@thamizmanam.com' என்ற முகவரிக்கு

மெயில் தட்டி விட்டேன். ஆனால், எந்த பதிலும் இல்லை.

இதற்கு விடை தெரிந்தால், எனக்கு சொல்ல முடியுமா?

மிக்க நன்றி.

said...

நானும் பாக்கறேன். நிலாபாப்பா சீனாவை தாத்தான்னு சொன்னா அது நியாயம்.

குசும்பன், சஞ்சய் வயசுக்கும் சீனா வயசுக்கும் ஒரு 10 வயது வித்தியாசம்தான் இருக்கும். அவர எப்படி தாத்தான்னு சொல்றீங்க.

சீனா இவங்க ரெண்டு பேரயும் ஒரு சாத்து சாத்துங்க

said...

//மங்களூர் சிவா said...
மிக நல்ல பதிவு!

ஆழமான கருத்துக்கள்!

அருமையான சிந்தனைகள்//

ரிப்பீட்டேய்

இது போண்ற கட்டுடைப்புக்கள் தொடர வேண்டுகிறேன்

said...

அய்யோ அய்யோ - யாருப்பா இந்த சீனா தாத்தா ? = எலோரும் எனக்குப் போன் போட்டு எப்படி திடீர்னு வயசாச்சின்னு கேக்குறாங்க ? எனக்கும் தெரில - நேத்திக்குக் கூட பொம்பெளைப் புள்ளங்க நெரெய வந்து பேசிட்டுப் போச்சுங்க - ஓண்ணூ கூட தாத்தா சொல்லலெ - இது யாரும் போலி சீனா தாத்தாவா ?

said...

குசும்பா ரொம்ப கம்மியா கலாய்ச்சு இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்.

என்னாச்சுப்பா உடம்பு கிடம்பு சரியில்லையா?

said...

உன்கிட்ட இன்னும் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்கிறேன்

said...

நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ, நல்லா யோசிச்சுக்கோ, முடிஞ்சா தனியா ஒரு ரூம் போட்டு யோசி.

அதுக்கப்புறம் போட்டுத் தாக்குனா ஒரே போடா இருக்கனும் ஓக்கேவா?

said...

அடச்சே... இதுக்கு தான் காலைல்ல அவ்ளோ பில்டப்பா? ஒரு ISD Mail ஒரு STD போன் கால் வேஸ்ட் பண்ணிட்டிங்களே. நான் ரொம்ப ஆவலா வந்து பார்த்தேன். எதோ பெரிய அளவுல டேமேஜ் இருக்கும்னு. இப்டி சப்புனு இருக்கும்னு கொஞ்சமும் நெனைக்கவே இல்லை.:( .. மிஸ்டர். குசும்பன்.. உங்க கிட்ட இன்னும் பெட்டரா எதிர் பார்க்கிறேன்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :)

said...

//சீனா தாத்தா: (அடைப்பு வந்தா அதுக்காக காவா அடைப்பு எடுப்பவனையா கூப்பிடமுடியும்) ஹோ சரி சரி! நீங்க உங்க பதிவில் நீங்க பேசும் பொழுது நீங்களே காதை பொத்திக்கிட்டு பேசுவதாக சொல்லி இருக்கீங்க ஆனா எதிரே இருப்பவர்கள் மூக்கை பொத்திக்கிறார்களே ஏன்?

பொடியன்: நோ கமெண்ட்ஸ்//

திரு.குசும்பன் அவர்களே.. என் வீக்குனெஸ வெளிய உட்டதால உங்க மேல மான நஷ்ட வழக்கு போடப்போறேன்.

said...

//சீனா தாத்தா: நீங்களும் வினு சக்கரவர்தியும் சொந்தமா? உங்கள் குரல் அவர் குரல் போல் அப்படியே இருக்கிறதே!

பொடியன்: ஆமாம் அவர் மட்டும் அல்ல T.ராஜேந்தர் கூட சொந்தம்.//

குசும்பனும் மங்களூர் சிவாவும் கூட என் சொந்தம்.. :)

said...

//சீனா தாத்தா: பல்செட்டை கழட்டி விட்டு வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ//

ஸோ.. குசும்பன் மாம்ஸ் என்னை கலாய்க்கல.. :)

said...

//Blogger மங்களூர் சிவா said...

மிக நல்ல பதிவு!

ஆழமான கருத்துக்கள்!

அருமையான சிந்தனைகள்!//

ஹிஹி... எவ்ளோ ஆழம் மாம்ஸ்? :)

said...

//கோபிநாத் said...

அண்ணே வாழ்க ;)//

கோபி..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((

said...

//Joseph Paulraj said...

ஐயா சரவணா, இனிமே உங்க ஜிமெயில் ஸ்டேடஸ் பார்த்துட்டு உங்க பக்கமே வரக்கூடாதுனு முடிவுபண்ணிட்டேன். மொக்கையோ மொக்கை. தாங்கல சரவணா.//

ஃப்ரீயா விடுங்க பாஸ்.. சீரியஸா எழுத நெறய பேர் இருக்காங்க. ஆனா இப்டி சிரிக்க வைக்க கொஞ்சம் பேர்தான் இருக்காங்க. இதையும் கொஞ்சம் ரசிங்க. வாழ்க்கையே விளையாட்டு தான். :)

Anonymous said...

Enna kodumai Saravanan idhu...
Iththanai naala antha maaaaa methai yaarunu theriyama poche...
ada namma cheena thathavukkuthaan eththanai adakkam.. namma kusumbarukku ththaan eththanai perumidham.. asathungooo.. :)

said...

//மஞ்சூர் ராசா ..
"கமலஹாசனையே நேரில் கலாய்த்த பதிவருடன் ஒரு பேட்டி!!!...":

பதினாறு வயதினிலே படத்தில் வரும் அந்த பாடல்:

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு என்ற பாடலில் கடைசி வரிகள் தானே!//

மஞ்சூர் நாம எவ்ளோ "அன்புடன்" பழகி இருக்கோம். இப்படி போட்டு குடுக்கறிங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

//
மங்களூர் சிவா said...

மிக நல்ல பதிவு!

ஆழமான கருத்துக்கள்!

அருமையான சிந்தனைகள்!

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்