Monday, August 18, 2008

எம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை!!!

அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை விசாரிக்க விசாரனை குழு அமைக்கப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. இதில் நேற்று இடைத்தரகர் சோகைல் கூறுகையில் கொடுத்த சாட்சியம்..

//பா.ஜ.க எம்.பிக்களுக்கு பணம்கொடுப்பது பற்றி நான் அமர்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது அவர் யாரோ ஒருவரிடம் செல்போனில் பேசினார்.
மேலும் 3 பா.ஜ.க எம்.பிக்கள் நம் பக்கம் வந்துள்ளனர்” என்றார், பிறகு 3 பா.ஜ.க எம்.பிகளிடம் தொடர்பு கொண்டு “உங்களை பற்றி நான் பிரதமரிடம் கூறி விட்டேன்” என்றார்.


இதையடுத்து சோனியா அரசியல் ஆலோசகர் அகமதுபடேலை தொடர்பு கொண்டு பேசினார். அவருடம் பா.ஜ.க எம்.பிக்களை பேசவைத்தார். இவ்வாறு இடைத்தரகர் சோகைல் சாட்சியம் அளித்துள்ளார்.

அமர்சிங்குக்கு இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இருப்பதாக சோகைல் குறிப்பிட்டுள்ளார், அமர்சிங் செல்போனில் பிரதமருடன்தான் பேசினார் என்று பெருள்பட அவர் சாட்சியம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
//

இந்த சாட்சியம் ஒன்றே போதும் பிரதமர் தவறு செய்யவில்லை என்று! எப்படி என்று கேட்கிறீர்களா? இதுபோல் மிகவும் முக்கியமான விவசயங்களை எல்லாம் மன் மோகனிடம் யாராவது பேசுவாங்களா? பேசினாலும் அவரால் முடிவுதான் எடுக்க முடியுமா? சீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு சோனியா அம்மையாரை கூப்பிட்டு இருக்கானுங்க. நம்ம அமர் சிங்குக்கா தெரியாது நம்ம மன் மோகன் சிங் “பவரை” பற்றி?

என்ன நான் சொல்வது சரிதானே!!!

15 comments:

said...

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

said...

correckitu thalaivaaaa

said...

யோவ் மாமா.. உம்ம குசும்பு PMO வரைக்கும் போய்டிச்சா? :)..
என்னவோ போங்க... மன்மோகன் சிங்கை ஏளனம் பண்ண அத்வானி நெலைமைய பார்த்திங்க இல்ல.. இப்டி எல்லாம் தப்பா பேசக் கூடாது. எங்கள் நாட்டு பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக எழுதிய குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன். :)

குறிப்பு : நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு எதிராகத் தான். பிரதமருக்கு எதிராக மட்டும் இல்லை. ஆகவே இதில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை..

said...

//Labels: கண்டுபிடிப்பு, சி.பி.ஐ மூளை, விஜயகாந்து//

ஹிஹி... அட சிரிப்பு போலீசு.. :P

said...

/
சீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு
/

ROTFL
:)))))))))))))))))))))))))))

Anonymous said...

விஜயகாந்து tag போட்டதுதான் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். அரசாங்கம் பார்த்துட்டீங்களா இல்லையா?

said...

கண்டுபிடிப்பு ஜூப்ப்பரு!!! கலக்கிட்டீங்க!!!

எப்ப C.B.I-ல சேரப்போறீங்க....இல்ல முன்னாடியே சேந்துட்டீங்களா???

said...

நன்றி TBCD

நன்றி இளய கவி

said...

SanJai இந்தமாதிரி எம்புட்டு நாள்தான் உங்களால் நடிக்க முடியும்!!!

எங்கள் பிரதமர் வல்லவர், திறமையானவர் என்று... கொறட்டை விட்டு தூங்கிய பிரதமர் தேவகவுடா, நரசிம்மராவ் கூட இவ்வளோ கிண்டலுக்கு ஆளானது இல்லை!!!

said...

ஆட்டக்கடிச்சு மாட்ட கடிச்சு இப்ப ஒரு முறுக்க கடிக்க கூட அன்னை சோனியாகிட்ட உத்தரவு வாங்குற நம் சிங்கையே நீ கடிச்சிட்டியா?

ஏம்பா கோவி.க அண்ணண் மாதிரி ஆளுங்கல கலாய்கிற சரி, அது எதுக்கு பாவம் பச்சத்தண்ணிய கூட சொந்தமா குடிக்க முடியாத பச்சைப்புள்ளங்கள எல்லாம் கலாய்கிற? இத சிங் படிச்சா, அழுவறதா வேணாமாண்ணு கூட அன்னைகிட்ட கேட்கணும். விட்ருய்யா, வலிக்கும்ல.

said...

SanJai said...
ஹிஹி... அட சிரிப்பு போலீசு.. :P//

இப்படி எல்லாம் சொன்னா கட்டி போட்டு நரசிம்மா பார்க்க வெச்சுடுவோம்!!

****************************

மங்களூர் சிவா குடும்பத்தோடு போய் வந்து இருக்காங்க அம்மையார். இவரு குடும்பத்தோடு டீவியில் பார்த்து இருக்கிறார்.
**************************

சிவராமன் கடைசியா அவர் படம் பார்த்தது ரமணா! அதுக்கு முன் வீரம் விளைஞ்ச மண் அதன் பாதிப்புதான் இன்னும் தொடருது.

*****************************

said...

விஜய் ஆனந்த் எங்கள் தானே தலைவர் விசயகாந்து பிரதமர் ஆகும் பொழுதுதான் நானும் CBIயில் சேரலாம் என்று இருக்கிறேன், அதுவரை இதுபோல் சமூக சேவை மட்டுமே!!!

said...

அத விடுங்க பழைய மேட்டரு!
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆப்பாமா உண்மையா

said...

ஏம்பா கோவி.க அண்ணண் மாதிரி ஆளுங்கல கலாய்கிற சரி, அது எதுக்கு பாவம் பச்சத்தண்ணிய கூட சொந்தமா குடிக்க முடியாத பச்சைப்புள்ளங்கள எல்லாம் கலாய்கிற? இத சிங் படிச்சா, அழுவறதா வேணாமாண்ணு கூட அன்னைகிட்ட கேட்கணும். விட்ருய்யா, வலிக்கும்ல//

:)

said...

:)