Thursday, April 2, 2009

தேனாம்படுவை தப்பு தாளங்கள்!

பொதுவாக யாரும் இறந்து போனால் மட்டுமே அடிக்கப்படும் மேளம் வகை தப்பு.சில சமயம் எங்க ஊரில் ஊர் கூட்டம் போடப்படும் பொழுதுஅதுக்கான தேதி நேரம் ஆகியவற்றை சொல்லி ஊர் தலையாரி அடித்துக்கொண்டு செல்வார்.சாவு வீடாக இருந்தாலும், அடிக்கிற முறையில் தப்பை அடித்தால் கால் தனிச்சையாக ஆடும் எவ்வளோ பெரிய ராயல் பேமிலியாக இருந்தாலும்.

சாதாரண சரக்கு சீமை சரக்கு என்பது போல் லோக்கல் ஆளுங்க அடிக்கும் தப்பு தாளத்துக்கே ஒரு இது இருக்கும்,இதில் சீமை சரக்கு மாதிரி ஆட்கள் தான் தஞ்சாவூர் அருகில் இருக்கும் தேனாம்படுவை கிராமத்தை சேர்ந்தவர்கள். தேனாம்படுவை கிராமத்து தப்பு செட்டு ஆட்கள் என்பவர்கள் சாவு தப்பு அடிப்பவர்கள் அல்ல, கிராமத்து திருவிழாக்களுக்கு தப்பு அடிப்பவர்கள்.

கிராமத்து திருவிழா என்றால் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் களைகட்டும், தேனாம்படுவை தப்பு செட்டு ஆட்களோடு கூடவே நாதஸ் ஆட்களும், மேளம் கொட்டுபவர்களும் வருவார்கள், கூடவே ரெண்டு ஜிகினா சுந்தரிகள்!எங்கு ஆஜர் ஆகவேண்டுமோ அங்கு சரியாக மாலை 7 மணிக்கு ஆஜர் ஆகிவிடுவார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு கொஞ்சம் லைட்டா “சுதி” ஏத்திக்கிட்டு வைக்கோல் போட்டு கொளுத்தி தப்பை தனலில் காட்டி வார் இழுத்து கட்டும் பொழுது ”டம்” டம்” என்று தட்டிப்பார்பார்கள். எல்லாம் சுதி ஏத்தலும் முடிஞ்சு , ஜிகினா சுந்தரிகளும் அப்படியே ஒரு கப் சுதி ஏத்தின பிறகு, ஊர் மைதானத்தில் வந்து சேர்ந்துவிடுவார்கள்.

தப்பு அடிப்பவர்களும் கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு,ஒரு வெள்ளை பனியன் வரிந்து கட்டிய வேட்டியோடு அவர்கள் ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டு அடிக்க ஆரம்பிப்பார்கள்,சாதரணமாக மற்ற குழுவினர் எல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் காட்டுவார்கள், ஆனால் நம்ம தேனாம்படுவை தப்பு செட்டுக்காரர்கள் அடிக்கும் முதல் அடியே 20:20 மேட்ச் போல வேகம்தான், சட சட சடன்னு வரும் பேய் மழை போல் டன்னா டர்னா ரகம் தான்.

கூடவே வரும் ஜிகினா சுந்தரிகள் போடும் குத்தாட்டம் இளசுகளை கட்டிப்போடும் அவுங்க போடும் ஒவ்வொரு குத்து ஆட்டத்துக்கும் பறக்கும் விசில்கள் தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கார், விசில் சவுண்டு எகிற எகிற இவுங்க ஆட்டத்திலும் சூடு பறக்கும் ஆனால் விரசம் இருக்காது. குழுவாக வரும் இவர்கள் சிறிது நேரத்தில்இரு குழுவாக பிரிந்து போட்டி கச்சேரி போல் நடக்கும் ஒருவகையில் அவர்களுக்கு சிறிது ஓய்வு போல தோன்றினாலும் போட்டி செம சுவாரஸ்யமாக இருக்கும். தப்பு அடித்துக்கொண்டே நெருப்பில் விளையாடுவது, கீழே வைத்து இருக்கும் குண்டு ஊசியை கண் இமைகளால் தப்பு அடித்துக்கொண்டே எடுக்கும் பொழுது நெஞ்சம் பதறும், பண்ணையார்கள் வைக்கும் 50 ரூபாய் நோட்டை கண் இமையால் கீழே இருந்து எடுப்பது போல் சாகசங்கள் பல செய்வார்கள் பின் இரு குழுக்களும் திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து கடைசியாக இரு குழுவும் இணையும் இடத்தில் முடிகள் சிலிர்க்கும் படி ஒரு அதகள ஆட்டம் போடுவார்கள்.

மிகவும் துள்ளல் இசை வேண்டும் என்றால் ஒரு முறை தேனாம்படுவை தப்பு செட்டை உங்க ஊருக்கு கூப்பிட்டு பாருங்கள் வித்தியாசமான இசை அனுபவம் கிடைக்கும்!

டிஸ்கி: இப்பொழுது கிராமங்களில் திருவிழாக்கள் நடப்பதே குறைந்து வருகிறது, அப்படி நடக்கும் இடங்களிலும் டிவி புகழ் நடிகை நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்துவிடுகிறார்கள், இதுபோல் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று பாருங்கள், குத்தாட்டம் வேண்டாம் என்றால் முன்பே சொல்லிவிட்டால் அவர்கள் இல்லாமலும் வருவார்கள்!

15 comments:

said...

me the first.. :)) Read the post too.. :))

said...

Good post anna.. :))

//இப்பொழுது கிராமங்களில் திருவிழாக்கள் நடப்பதே குறைந்து வருகிறது, அப்படி நடக்கும் இடங்களிலும் டிவி புகழ் நடிகை நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்துவிடுகிறார்கள்//

Exactly.. :((

said...

கிராமப்புற கலைகள் மெல்ல அழிந்து சினிமாத்தனம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கும் இக்காலகட்டத்தில் இது போன்ற கலைஞர்களை ஊக்குவித்தலில் அரசின் பங்கினை விட பொதுமக்களின் பங்கே அதிகம் வேண்டும்!

ம்ம்ம் இப்ப எல்லாம் கிராமத்து விழாக்களே ரொம்ப அருகிப்போய் சிம்பிளா நடக்க ஆரம்பிச்சுடுச்சே :(((

said...

நட்சத்திர வாரத்தில் கலந்து கட்டி அடிக்கறீங்களே பாஸூ!!

said...

நீங்க பார்க்க நேரும் போது எல்லாம் முடிந்தால் விடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்களேன்..

said...

/// கவிதா | Kavitha said...

நீங்க பார்க்க நேரும் போது எல்லாம் முடிந்தால் விடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்களேன்..////
சொல்ல நினைத்தேன்.. அக்கா சொல்லி விட்டார்.

said...

அவ்வ்வ்

எங்க பொழப்பை கெடுக்க நினைக்கும் குசும்பனை வண்மையாக கண்டிக்கிறேன்

said...

அருமை..
நான் ஒரு முறை ஊசியை கண் இமையால் எடுத்தவரைப்பார்த்து பயந்தே போனேன்.

said...

இதுதான் தப்பு.

said...

/
இப்பொழுது கிராமங்களில் திருவிழாக்கள் நடப்பதே குறைந்து வருகிறது, அப்படி நடக்கும் இடங்களிலும் டிவி புகழ் நடிகை நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்துவிடுகிறார்கள்
/

:(((

said...

/
நமிதா...! said...

அவ்வ்வ்

எங்க பொழப்பை கெடுக்க நினைக்கும் குசும்பனை வண்மையாக கண்டிக்கிறேன்
/

:)))))))
ROTFL

said...

நமீதா ப்ளாக் எல்லாம் வெச்சிருக்கா????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ஆஹா
நண்பா என்ன ஒரு அருமையானப்பதிவு ,
தஞ்சாவூர் மாவட்டத்துல ரெட்டிப்பாளையம் தேனாம்படுவை என தப்புக்கு புகழ் பெற்ற ஊர்கள் பல இருக்கப்பா. நீ சொன்னமாதிரி தப்பாட்டம்னா, கால் எல்லாம் தானா ஆடும் . நெம்ப கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு நிக்கனும்.
எங்க கிராமத்து திருவிழாவுல இன்னமும் இந்த மாதிரி ஸ்பெசல் தப்பாட்டம், பேண்ட் செட் எல்லாம் இருக்கும். அது ஒரு சூப்பர் அடி மாப்பி, நேர்ல பார்த்தாதான் தெரியும்.

தப்பு - Mistakenly No Body should read this as mistake.

said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி ஆயில்யன்

நன்றி பரிசல்

நன்றி கவிதா அடுத்தமுறை முயற்சி செய்கிறேன்.

நன்றி தமிழ் பிரியன்

நன்றி நமிதா

நன்றி முத்துலெட்சுமி

அறிவிலி அதுதான் தப்பு

நன்றி மங்களூர் மாப்பி

நன்றி சோசப்பு எல்லாத்தையும் விட தேனாம்படுவைதான் பெஸ்ட்!
ஆமா துரை இங்கிலீஸ்ல எல்லாம் என்ன என்னமோ சொல்லுதுப்பா!

said...

கேள்வி பட்டிருக்கேன் தேனாம்படுவை தப்பு செட்டுன்னு. நல்ல பகிர்தல். இப்படித்தான் கலந்து கட்டி அடிக்கனும் குசும்பா. வெல்டன்!