Tuesday, May 12, 2009

நாகப்பட்டினம் தி.மு.க கதி???

தொகுதி வரைமுறை ஆய்வுக்கு பின் நாகப்பட்டினம் தொகுதியில் திருவாரூர்,கீழ்வேளூர்,வேதரண்யம்,திருத்துறைபூண்டி,திருவாரூர், நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நாகப்பட்டினம் தொகுதி.

இந்தமுறை திமுக சார்பில் விஜயனும் , இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள். நாகப்பட்டிணம் எப்பொழுதும் சி.பி.எம்க்கு ஆதரவாகவே இருந்து வருகிறது,அதோடு திருத்துறைபூண்டியிலும், நன்னிலத்திலும் இ.கம்யூனிஸ்ட் பலமாக உள்ளது. இப்பொழுது இருக்கும் எம்.எல்.ஏக்களும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் தான், இது போன முறை தி.மு.கவோடு கூட்டணியாக இருந்து வெற்றிப்பெற்ற இடங்கள்தான் என்றாலும் நன்னிலத்தில் பத்மாவதிக்கும், திருத்துறை பூண்டியில் இ.கம்யூனிஸ்டை சேர்ந்த உலகநாதனுக்கும் தனி செல்வாக்கும் நல்ல பெயரும் இருப்பதால் தி.மு.கவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

அதோடு தி.மு.கவின் கோட்டையாக திருவாரூர் விளங்கினாலும், இருக்கும் மின் வெட்டு பிரச்சினையால் மிகவும் வெறுத்துபோய் இருக்கும் விவசாயிகள் ஓட்டு இந்த முறை தி.மு.கவுக்கு இல்லை என்பதால் அங்கும் பெரும் சரிவை சந்திக்க இருக்கிறது.

இங்கு தே.மு.தி.க பெரும் பிரச்சினை இல்லை, அதோடு பா.ம.கவுக்கு என்று தனி ஓட்டு வங்கி எதும் கிடையாது அதே போல் ம.தி.மு.கவுக்கு கார்த்திக் கட்சியில் இருக்கும் ஆட்கள் கூட கிடையாது என்பதால் இவர்கள் கூட்டணி உதவி செய்யாது என்றாலும் , இ.கம்யூனிஸ்டுக்கு அ.தி.மு.கவின் ஓட்டுகள் செல்வதால் கடைசி நேர கணிப்பு படி நாகப்பட்டினம் இ.கம்யூனிஸ் பாக்கெட்டில் விழும் என்று தெரிகிறது.

ஊர் ஊராக பிரச்சாரம் செய்து இருக்கும் தளபதி ஸ்டாலின் வருகை எத்தனை தூரம் ஓட்டை கொண்டு வரும் என்று சொல்லமுடியாது ஆனால் தி.மு.கவுக்கு கிடைக்கப்போகும் தொகுதியில் ஒன்று குறைவு என்று சொல்லமுடியும்.

8 comments:

said...

நாகப்பட்டினத்தில் தானே காங்கிரஸ் சீட்டு கேட்டு பவனில் ஆர்ப்பாட்டம் பண்ணியது! அவர்களது ஓட்டே தி.மு.கவுக்கு விழாதே!

அய்யோ பாவம்,

said...

ஓ ஸாரி நாகப்பட்டினம் வேற பக்கமுள்ள இருக்கு!

எப்படியும்ரெண்டு பக்கமும் ஆப்பு தான் இல்லையா!

said...

கிட்டதட்ட இதேகதி தான் 40 லும்.

said...

நாற்பதிலும் ஆப்பா?

said...

என்னோட கணிப்பும் இதுதான் :)


இருந்தாலும் போட்டி இருக்கும் !!

said...

ஆப்பு கிடைக்கும், ஹாஃப்பு கிடைக்குமா?
அட, கட்டிங்காவது?
ஹும்..
40தும் கழுவி கவுத்தாச்சா?
www.kalakalkalai.blogspot.com

said...

வாய்க்கு தோசை வரும் வரைக்கும் வாயைத் திறக்கவே கூடாது.

said...

வால்பையன ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்தப்ப மிலிட்டரி ட்ரெஸ்ல இருந்தாரு.இப்ப திடீர்ன்னு காப்டன் ஆயிட்டாரு:)