Monday, August 24, 2009

சென்னை அது ஒரு ஊரு!

என்னிடம் பேரை கேட்டாலே டரியள் ஆகும் ஊர் எதுன்னு கேட்டா கொஞ்சமும் யோசிக்காமல் வரும் பெயர் "சென்னை." ஏன்னு தெரியனுமா? ஒரு கொசுவத்தி சுத்தனும்

காலேஜ் முடிச்சுட்டு அனிமேசன் கோர்ஸ் படிக்க சென்னை வந்தேன், என்னுடன் ஸ்கூலில் படிச்ச நண்பன் அவன் ரூமில் தங்கிக்கலாம் என்றான், வந்து கிண்டியில் இறங்கியதும் வந்து வேளச்சேரியில் இருக்கும் அவனுடைய ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனான், சின்ன அறைதான் 4 பேர் இருந்தார்கள். காலையில் எழுந்து குளிக்க போனேன் போய் பைப்பை திறந்தால் தண்ணி வரல, பக்கத்தில் ஒரு நீல கலர் ட்ரம், அதில் தண்ணி இருந்துச்சு எடுத்து பக்கெட்டில் ஊத்தி குளிச்சிட்டு ஜட்டி பனியனை அலசலாம் என்றால் தண்ணி இல்ல, பாத்ரூம் வெளியே ஒரு ட்ரம் தண்ணி இருந்துச்சு அதில் இருந்து தண்ணி எடுத்து ஊத்தி ஜட்டி பனியன் அலசிட்டு வந்தேன், கொஞ்ச நேரத்தில் நண்பன் குளிக்க போனவன் சுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான், என்னாடா மாப்பு குளிக்க போறேன்னுட்டு உடனே வந்துட்டேன்னு கேட்டேன்.

டேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான்? குளிச்சுட்டேன் டா என்றேன். என்னமோ அவனோட பிகரை ஆட்டைய போட்ட மாதிரி என்னது குளிச்சுட்டீயா என்றான் அதிர்சியாக, ஆமான்டா பைப்பில் தண்ணி வரல அதான் அங்கிருந்துச்சு ஊத்தி குளிச்சுட்டேன் என்றேன், அவ்வளோ தண்ணியிலுமா என்றான் ரொம்ப அதிர்ச்சியாக. என்ன டா இவ்வளோ ஷாக் ஆவுற, பனியன் ஜட்டி அலச தண்ணி இல்லாம வெளியில் இருந்த ட்ரம்மில் இருந்து ரெண்டு குடம் எடுத்து அலசினேன் என்றேன். ங்கொயாலே பனியன் ஜட்டி அலச ரெண்டு குடமா? அதுவும் ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரைய ஆரம்பிச்சுட்டீயே டா, அவுங்க வீட்டு தண்ணிய எடுத்து வேற வீடு மாற வெச்சுடுவ போல, டேய் டேப்பில் தண்ணி வராது ஒருத்தருக்கு ஒரு குடம் தான் டா குளிக்க என்றான், ஹவுஸ் ஓனரிடம் போய் பையன் புதுசு தெரியாம எடுத்துட்டான் திரும்பி நாளைக்கு தந்துடுறோம் என்று சொல்லி சமாளிச்சுட்டு வந்தான்.

எங்க ஊரில் வீட்டுக்கு அருகிலேயே விவசாயத்துக்கு உள்ள எங்க போர் செட், அந்த தொட்டி ஒரு 5 அடி நீளமும் ஒரு 4 அடி ஆழமும் இருக்கும், அதில் போய் குளிச்சோம் என்றால் சும்மா அருவியில் குளிச்ச மாதிரி ஒரு பீளிங் கிடைக்கும், ஒரு மணி நேரம் ஊறிட்டு, அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.அப்படி இருந்த என்னை ஒரு குடத்து தண்ணியில் அடைக்க பார்த்தது சென்னை. அதைவிட கொடுமை தண்ணீர் பிடிச்சு வைக்கும் ஆள் வரவில்லை என்றால் குடத்தை வெச்சு தண்ணி புடிக்கனும் அது அதைவிட கொடுமை.

ஒரு குடத்தில் காக்கா குடிக்க தான் கல்லை போட்டுச்சு அதில் ஒரு நியாயம் இருந்துச்சு ஆனா என்னை குடத்தில் கல்லை போட்டு மேலே வரும் தண்ணியில் குளிடான்னா அது எந்த விதத்தில் நியாயம்?

அதைவிட கொடுமை பஸ், எந்த ஊருக்கு போனாலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு கர்சிப் போடுவோம் ஆனா சென்னை வந்தப்ப பஸ்ஸில் போனா எல்லோரும் இந்த பக்கம் உட்காந்துக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கொடுத்தார்கள் அட பார்றா இவ்வளோ நல்லவனுங்களா இருக்கானுங்க என்று ஆரம்பத்தில் நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சுது அது பக்கத்து பஸ் கார் விடும் புகையில் இருந்து தப்பிக்க என்று, நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இமேஜ் செண்டருக்கு 45A பஸ்ஸை புடிச்சா மொத்த சென்னையும் அதில் இருக்கிற மாதிரி கூட்டம் நிரம்பி வழியும், இறங்கும் பொழுது அயர்ன் செஞ்சு போட்டுக்கிட்டு போன சட்டை அப்படியே கசங்கி பழய துணி போல் இருக்கும்.

அப்புறம் மழை பேஞ்சா கேட்கவே வேண்டாம்...

சென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))

61 comments:

said...

east or west
chennai is the best!! :-))

said...

//சென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))//

குசும்புன்ற பேர இங்கதான் மேட்ச் ஆவுது நல்லா?.
எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறிங்க?

said...

அப்படி போடு அரிவாளை !!!!!

said...

;-))))))

said...

//அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.//

எல்லா வீட்லயும் அம்மாக்களுக்கு இந்த நக்கல் கமெண்ட் அடிக்க தெரிஞ்சுருக்கே :(

said...

என்ன தான் சொன்னாலும் சென்னை எப்பவுமே பெஸ்ட் தான் எனக்கு :)

said...

// சந்தனமுல்லை said...

east or west
chennai is the best!! :-))//

ஏன் பாஸ் இவுங்க ஈஸ்ட்டும் வெஸ்டையும் மட்டுமே பார்த்துக்கிட்டு உக்காந்திருக்காங்க மத்த ரெண்டு பக்கமும் சுவர் கட்டியிருக்காங்களா?

said...

//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //


நான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க! :(

said...

சென்னை மாகத்மியம் பற்றி சொல்ல வந்த பாகவதர் குசும்பனாருக்கு ஒரு “ஓ” போடுங்கப்பு...

said...

// டேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான்? குளிச்சுட்டேன் டா என்றேன். //

மெட்ராஸ் தண்ணிக் கஷ்டம் உலக் பிரசித்தமாயிற்றே... உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு...

ஆச்சரியமா இருக்குங்க

said...

சென்னை பற்றி இன்னும் அடிக்கலாம் தல..மா நரகம்

said...

"ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரை..."

படித்துச் சிரித்தேன்.

said...

North and south is filled with ice cubes so we can look at east or west only.

what ever it be East or west or south or north chennai is the best. because lots of figures

said...

// ஆயில்யன் said...

//அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.//

எல்லா வீட்லயும் அம்மாக்களுக்கு இந்த நக்கல் கமெண்ட் அடிக்க தெரிஞ்சுருக்கே :(//

ஹிஹி...நோ ஃபிலிங்ஸ் பாஸ்!

said...

தொடரட்டும் சென்னை கொசுவர்த்திகள்.
:))

said...

//நான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க//

-Mee Too :((

said...

சென்னையை பற்றி இப்படி ஒரு terror இமேஜ் ஐ உருவாக்கியிருக்கீங்களே நியாயமா?

said...

//Kalyani Suresh said...
சென்னையை பற்றி இப்படி ஒரு terror இமேஜ் ஐ உருவாக்கியிருக்கீங்களே நியாயமா?//

அதானே...நானும் சென்னை வாசிதான். உங்க இடுகையில ரொம்ப அதிகப்படுத்தி எழுதியிருக்கீங்கன்னு தோணுது. எல்லா ஏரியாவிலும் அப்படி இல்லைங்கிறதை நீங்க புரிஞ்சிக்கணும். என் செண்ட் பாட்டிலை யாருப்பா எடுத்தது. வேலைக்கு போகணும் மணியாச்சி சீக்கிரம் கொடுங்க. ஹி...ஹி...

said...

எனக்கும் இதே அனுபவங்கள் உண்டு..
:-(

ஆனாலும் எனக்கும் சென்னை பிடிக்கும்..
:-)

said...

//.. என் செண்ட் பாட்டிலை யாருப்பா எடுத்தது. வேலைக்கு போகணும் மணியாச்சி சீக்கிரம் கொடுங்க. ஹி...ஹி...//

ஹி...ஹி.. :-D

said...

என்ன தான் சென்னையில் இவ்வளவு கொடுமைகள் இருந்தாலும் கடற்கரைக்காக சென்னையை சகித்துக் கொள்ளலாம். :)

said...

Nallvangalukku nalla vishayam mattum dhaan kanla padumaamae.. appo neenga????

said...

//சந்தனமுல்லை said...

east or west
chennai is the best!! :-))//

Repeatae :))))

said...

திடுமென முடித்த மாதிரி ஒரு ஃபீலிங்.!

(யோவ்.. இன்னா கொயுப்பா.. எங்கூரப்பத்தி டகால்டி வுட்னுக்கிற.. டரியலாயிடுவ..)

said...

மீ த 25.!

said...

நானும் ஒருநாலு வருசம் குப்பை கொட்டிணேன்!

said...

சிரித்து...சிரித்து....முடியவில்லைப்பா!!!கலக்கல்ஸ்!

said...

எனக்கும் சென்னையப் பத்திய மிக மோசமான அனுபவங்கள் இது போல இருக்கு. விரைவில் எழுதுறேன்

said...

Double LOL
டக்கர் தலீவா!

said...

:)) சிங்கார சென்னை....

said...

குசும்பா,

அட்டகாசம். ஆனா, என்ன சொன்னாலும் சென்னை சென்னைதான். உங்கள மாதிரி வெளியூர் ஆட்கள் டெயிலி ஆயிரம் பேரு வந்தா ஏன் தண்ணி கஷ்டம் வராது?

அதோட சந்தடி சாக்கில் தெனமும் குளிக்குற மாதிரி ஒரு இமேஜ் செஞ்சுகின. சரி சரி நா கண்டுகல.

அனுஜன்யா

said...

சென்னை பக்கமே தலை வெச்சு படுக்காத நாங்கல்லாம் தப்பிச்சோம்.. :)

said...

டம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..
ட்ரம்மில் குளிச்சேன்னு சொன்னா நம்புவோமா?

ஃப்ரண்ட் நம்பர் குடு ராசா...
நீ குளிச்சேன்னு சொன்னதை நாங்க கன்பார்ம் பண்ணணும்!

said...

டம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..
ட்ரம்மில் குளிச்சேன்னு சொன்னா நம்புவோமா?

ஃப்ரண்ட் நம்பர் குடு ராசா...
நீ குளிச்சேன்னு சொன்னதை நாங்க கன்பார்ம் பண்ணணும்!

said...

இந்த 'மெட்ராஸ்'காரய்ங்களெ இப்படித்தான்! நீங்க கவலப் படாதீங்க பாஸு!

எங்க ஊருக்கு வாங்க வைகை ஆத்துல ஸ்விம்மிங் பூல் கட்டி குளிக்க வைக்கிறேண்!

said...

\\சந்தனமுல்லை said...
east or west
chennai is the best!! :-))
\\

ரீப்பிட்டேய் ;)))

said...

விவேக் சென்னைக்கு வந்து கதை சொன்ன கணக்காவுலே இருக்கு

இருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் ஊரு

Anonymous said...

சென்னை நமக்கும் தூரம்தான். ட்ரான்சிட்ல மட்டும் தான் சென்னை பழக்கம்.

said...

i am from erode district and lived in chennai 12years and now in singapore. chennai is a incredible city. Rs.500kum food kidaikkum, Rs.5kum food kidaikkum. its has suitable for all citizens. And peoples also soft and helping natured. but koiambatore erode other citila Rs.5 sapita vendam oru tea with thum kuda podamudiyathu.

said...

சந்தனமுல்லை said...
east or west
chennai is the best!! :-))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

சுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான்,//

அவசரத்துல கூவத்துல அடிச்ச பந்துன்னு படிச்சது என் தப்புதான்!

said...

எனக்கும் இந்த தலைப்பு போலவே தான் தோணும்.. அதெல்லாம் ஒரு ஊருன்னு ..:)
எனக்கு நிறைய ஏமாத்தத்தை தந்துருச்சு அந்த ஊரு... :(

said...

:)))

said...

:)))

said...

சந்தனமுல்லை ஒரு மிஸ்டேக் chennai is the worst city ன்னு வரனும்:)


நன்றி வரதராஜலு

நன்றி சுந்தர்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி ஆயிலு, சேம் பிளட்:), கலர் குறைஞ்சு போறத பத்தி நாமே பேசக்கூடாதுன்னு சொல்றாங்க பாஸ்:)

ஆதவா நல்லா இரு!

இராகவன் அண்ணே குடிக்க நல்ல தண்ணி கிடைக்காதுன்னு தெரியும் ஆனா குளிக்கவும் கிடைக்காதுன்னு அப்பதான் தெரியும்!

நன்றி நர்சிம் இன்னும் போட்டு தாக்கிடலாம்!

நன்றி மாதவி

ராம் சென்னை பிகருங்க சூப்பர் பிகருங்களா? அவ்வ்வ்வ் ஜிகு ஜிகு பேப்பரில் ஆசை சாக்லேட்டை சுற்றினா அது 5 Star ஆகிடுமா?:))

நன்றி துபாய் ராஜா

கார்ல்ஸ்பெர்க் ஊர்ல நம்ம கலருக்கு டப் கொடுக்க பலபேரு இருக்காங்க போல:)

Kalyani Suresh ஏனுங்க நான் என்ன பொய்யா சொல்லி இருக்கேன்!:)

குடந்தை அன்பு நம்ம ஊரு ஆளா இருந்துக்கிட்டு சென்னைக்கு சப்போர்ட் செய்யலாமா?:))

நன்றி பட்டிக்காட்டான்

விக்னேஸ்வரி இதுக்காகதான் எங்க ஊரு எம்.பிக்கிட்ட மனு கொடுக்க போறோம் எங்க ஊரிலும் ஒரு பீச் செஞ்சு கொடுங்கன்னு:))

//Nallvangalukku nalla vishayam mattum dhaan kanla padumaamae//
அப்படியா சேதி!!! அல்லோ யாருங்க இது அனானியா சொல்வது? உங்க பேரு கண்ணுக்கு தெரியலைங்க, எதுவா இருந்தாலும் உங்க பேரில் வந்து சொல்லுங்க:))))


யோவ் ஆதி நீங்க இருப்பது ஆந்திராவில்:) உங்களுக்கு ஏன் கோவம் வருது:))

வால் அதான் தெரியுமே அந்த பிகரை கரெக்ட் செய்ய பார்த்து மாமா உங்களை ஊருக்கு பேக் செஞ்சது எல்லாம் மறந்துடமுடியுமா பாஸ்:)

நன்றி அருணா

சோசப்பு அதுக்கு முதலில் நீங்க பிளாக் ஆரம்பிக்கனும்:)))

நன்றி வெங்கிராஜா

நன்றி நாணல்

said...

//அனுஜன்யா said...
குசும்பா,
உங்கள மாதிரி வெளியூர் ஆட்கள் டெயிலி ஆயிரம் பேரு வந்தா ஏன் தண்ணி கஷ்டம் வராது?//

ரைட்டு! எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜ் தாக்ரே, இந்த அனுஜன்யா வெளி ஆட்கள் ஊர் மாறி வருவது பற்றி ஏதோ கருத்தை மும்பையில் இருந்துக்கிட்டு சொல்றார், என்னான்னு உங்க ஆட்களை விட்டு கொஞ்சம் விசாரிச்சு நல்லா “கவனிச்சு” சென்னைக்கு அனுப்புங்க அவரை:))

ஆமாம் பீர்

//கலையரசன் said...
டம்ளர்ல குளிக்கிற ஆளு நீங்க..//

நான் அவ்வளோ சிலிம் என்று சொல்லுறீயா ராசா:)

நன்றி pappu வந்துடுவோம் உங்க ஊருக்கு:)


கோபி நன்றி

அபு அப்சர் அதுசரிதான் ஆனா சூப்பர் ஊருன்னு சொல்வதை ஒத்துக்கமுடியாது!

சின்ன அம்மிணி நன்றி:)

PITTHAN அது சரிதான் ரோட்டு கடையில் சாப்பிடலாம் விலை குறைவாக!

நன்றி ஜோதிபாரதி

நன்றி முத்துலெச்சுமி

நன்றி நாஞ்சில் நாதம்:)

said...

// ரைட்டு! எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜ் தாக்ரே, இந்த அனுஜன்யா வெளி ஆட்கள் ஊர் மாறி வருவது பற்றி ஏதோ கருத்தை மும்பையில் இருந்துக்கிட்டு சொல்றார், என்னான்னு உங்க ஆட்களை விட்டு கொஞ்சம் விசாரிச்சு நல்லா “கவனிச்சு” சென்னைக்கு அனுப்புங்க அவரை:)) //

:)))))

said...

சந்தனமுல்லையை கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன்.

சென்னையே சிறப்பு.

சென்னையைப் பத்தி இப்படி எதிர்மறையான தகவல்களைத் தந்ததும், மேலும் இதுபோல மற்ற வலைப்பதிவர்களை எழுதத்தூண்டியதும் மன்னிக்க முடியாத குற்றம். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

:)

ஏன்னா, நானெல்லாம் கொஞ்சமாவது உலகம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சதே சென்னைக்கு வந்துதான்.

வாழ்க சென்னை! வளர்க சென்னையின் புகழ்!

said...

சந்தனமுல்லை said...
east or west + (NORTH + SOUTH)
chennai is the best!! :-))

Repeatttttttt

said...

ஆயில்யன் said...
//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //


நான்கூட சென்னையில ஒரு நாலு மாசம் இருந்துதான் ரொம்ப கலர் குறைஞ்சு போயிட்டேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க! :(

ம்க்கும் :)

said...

மிஸ்டர் குசும்பன், ஸ்டாப் திஸ். இல்ல காலி ஆயிருவே :-)

சென்னை வென்னையை போன்று மென்மையானது. கவிதை போல இல்ல? :-)
உங்கள எல்லாம் புனேவுக்கு அனுப்பணும். போய் பாரும் தெரியும் அவஸ்தை. :-)

said...

ஹா ஹா ஹா..

குசும்பன் அவர்களே... சென்னை தண்ணி பஞ்சம் வந்த்து எல்லாம் அந்த காலம், இப்பவுலாம் பைப் ஒபன் பன்னுன, தண்ணிதான். :)

அதுவும் இல்லாம, டாஸ்மாக் தண்ணிவேற...

said...

ஆயிரம் சொல்லுங்க... சென்னை..தான் எனக்கு பிடிச்ச ஊர்.

Anonymous said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

said...

குசும்பன் சார்

மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

ஒரு போலியின் வேலை

ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

சரக்கிருக்கிறவர்கள் ஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!

வாழ்க வளமுடன் !!

said...

கொய்யால.. எவ்ளோ வாட்டி ஜெட்டி ஜட்டினு கூவுவ.. அதை போடறவன் கூட இவ்ளோ விளம்பரம் பண்ண மாட்டான்.. :))

said...

எனக்கு கூட மாமா சென்னை பேர் கேட்டாலே டரியல் ஆய்டுது.. ஊரும் .. போக்குவரத்தும்.. கூட்டமும்.. வெய்யிலும்.. ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ..

said...

சூப்பர் குசும்பா என்னுடைய 6 வருட சென்னை வாழ்க்கையில் இரண்டு மூன்று வருடம் இப்பிடித்தான் பஸ் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாக ஆகி இருந்தேன்.

அதுக்கப்புறம் சைக்கிள் வாங்கீட்டேன் அதுக்கப்புறம் பஸ் நெரிசல் பிரச்சனை இல்லை.

சென்னையில் வீட்டில் கிணறு இருந்ததால் தண்ணீர் பிரச்சனை அவ்வளவாக இருந்ததில்லை.

said...

//நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) //

ப்ளஸ் வெயில்
:)))

said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. இன்னா கொயுப்பா.. எங்கூரப்பத்தி டகால்டி வுட்னுக்கிற.. டரியலாயிடுவ..
/

இதபாருய்யா வண்டலூர்க்காரங்கல்லாம் வந்து மெட்ராஸ்னு சவுண்டு விட்டுகிட்டு

said...

"நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று"

ஹி ஹி ஹி ஹி

சென்னை செந்தமிழ் உங்களை ஒன்றும் செய்யவில்லையா குசும்பரே?