Wednesday, July 21, 2010

40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா!!


(மிஸ்கின்: கேமிராவை பார்க்காம மேலே பார்த்து லாலாலால்லால்லான்னு வாய் அசைங்க)

அக்பர் என்ன செஞ்சாராம் குளிர் அதிகமான ஒரு மாதத்தில் அரண்மனைக்கு அருகில் இருக்கும் குளத்தில் ஒரு இரவு முழுவதும் யார் கழுத்தளவு தண்ணியில் நிற்கிறானோ அவனுக்கு 1000 பொற்காசுகள் என்று சொன்னாராம். குளத்து தண்ணி ப்ரிஜில் இருந்து எடுத்த தீபிகாபடுகோன் மாதிரி ஜில்ல்ல்ல்லுன்னு இருக்குமாம். பல பேர் போட்டிக்கு வந்துட்டு தோத்து போய்ட்டானுங்க. ஒரே ஒருவன் மட்டும் ஜெயிச்சான், அவனை கூப்பிட்டு பரிசு கொடுக்க போகும் பொழுது நக்கீரர் மாதிரி ஒரு அமைச்சர் குபீர் என்று நடுவில் புகுந்து, நீ இரவு முழுவதும் எப்படி குளிரில் தாக்குபிடிச்ச என்ன செஞ்சே என்று கேட்டாராம், அவனும் அதோ அரண்மனை கோபுரம் மேல் எரியும் விளக்கு ஆடுவதை அசைவதையும் பார்த்துக்கிட்டே இருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, குளிரும் தெரியவில்லை என்றானாம். உடனே அமைச்சர் மன்னா அந்த விளக்கில் இருந்து வரும் சூட்டினை பெற்றே இவன் இரவு முழுவது குளத்தில் தங்கியிருக்கான் என்று சொல்லி பரிசு கொடுக்காம அடிச்சிட்டார்.


கொஞ்ச நாள் கழிச்சு பீர்பால் வீட்டுக்கு அக்பரை விருந்துக்கு அழைச்சிக்கிட்டு போனார்.காலையில் போனவங்களுக்கு நல்லா பசி எடுக்க இஞ்சி கசாயம் கொடுத்துட்டு வேற எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டார், நேரம் ஆகிட்டே போகுது சாப்பாடு வருகிறமாதிரி தெரியவே இல்ல, அக்பர் ரொம்ப நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு சாப்பாடு போடுய்யா ரொம்ப பசிக்குதுன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டார்...இவரும் வரும் வரும் என்றார் ரொம்ப நேரம் கழிச்சும் சாப்பாடு வரவில்லை. என்னது இவ்வளோ நேரம் ஆவுது வாங்க மன்னா போய் சமையல் எவ்வளோ முடிஞ்சிருக்கு என்று பார்ப்போம் என்றார் பீர்பால், பின்புறம் போனா மரத்து உச்சி கிளையில் ஒரு பானை கட்டி தொங்குது,கீழே கொஞ்சமா விறகு எரியுது. என்னய்யா இதுன்னா? இதுல எப்படிய்யா சமைக்க முடியும் என்று கேட்டதுக்கு. ஏன் மன்னா ஒருவன் தூரத்தில் இருக்கு விளக்கின் மூலம் சூட்டை பெற்று ஒருவன் குளிரில் தாக்குபிடிக்கமுடியும் என்றால் இதுவும் சாத்தியம் தானே என்றார்...தவறை உணர்ந்தார் அக்பர். குளத்தில் நின்ற ஆளை கூப்பிட்டு 1000 பொற்காசுகளையும் கொடுத்தார்.


ரைட்டு இப்ப எதுக்கு இந்த நீதி கதை எங்களுக்கு எல்லாம் தெரியாது பாருன்னு சொல்றீங்களா?

நானும் அமீரும் நீத்துவும் ஒரு செம துள்ளல் ஆட்டம் போட்டோம் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னாருப்பா ஒருத்தர். இப்ப என்ன சொல்லியிருக்கிறார் என்றால்

//40 அடி உயரத் தில் ஒரு மரத்தின் மேல் பலகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதாவது, ஒரு 'ஒய்' வடிவ மரத் தில்... இலை, கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு அதை ஒரு மரத் தூண் மாதிரி செதுக்கி இருந் தார்கள். //அங்க ஆடவேண்டும் என்று சொல்லிட்டாங்க:)

ஆடியது எங்கே?? 40 உயர மரத்தின் மேலே...

நீத்து & அமீர் ஆடியது எங்கே? 40 அடிக்கு கீழே...

அவ்வளோதான்பா இந்த கதை:))
(படம் உதவி: ஆனந்தவிகடன்)

23 comments:

said...

தல இந்தக்கதை தெனாலிராமன் கதையாச்சே... அங்க பீர்பல் எங்க வந்தாரு...
ஓகே... யார்வந்தா என்ன நமக்கு நிதி ச்சே...நீதி தானே முக்கியம்....

said...

ஐ...மசாலா வடை எனக்கே எனக்கா....

said...

//நாஞ்சில் பிரதாப் said...
தல இந்தக்கதை தெனாலிராமன் கதையாச்சே
//

சாரி பிரதாப், நான் இத அக்பர் பீர்பால் கதையாதான் படிச்சிருக்கேன்.

said...

எங்க ஆடுதன்னது முக்கியமில்ல வேய்....

எப்படி ஆடுதுன்னுதான்
சாரி, ஆடுதம்னுதான் முக்கியம்...

said...

:))))))))))))))

said...

குசும்பா ,

:))))))))))))))))))))))))

said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

பாவம்பா அவரு, விட்டுங்க, அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே அழுவாரு,

said...

யோவ்..........

நல்லா வருது வாயில...


:))))))))))))))))))))

said...

::))

said...

தல லிங்கை அந்தாளு மப்புல இருக்கும் போது அனுப்பிற வேண்டியதுதான் :))))))))))))))))))))))

Anonymous said...

அந்த உமாசங்கர் பதிவையே தொடர் பதிவா போட்டிருக்கலாமில்லை குசும்பர். சான்சை மிஸ் பண்ணிட்டு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி :)

said...

ஆமா. குசும்பு யாருக்கு? :))

said...

:))))))

said...

எப்படிங்காணும் உம்மை மட்டும் விட்டு வெக்கறாங்க? நான் எதுனா எழுதினா, "நாற்பது வருடத்துக்கு மேலாக எழுத்தில் இயங்கிக் கொண்டிருப்பவரை விமர்சிக்க உங்கள் தகுதி என்ன?" அது இது என கேள்வி கேட்கறாங்க. கெட்ட வார்த்தையால வையறாங்க!

said...

// கும்க்கி said...

யோவ்..........

நல்லா வருது வாயில...


:)))))))))))))))))))) //

உங்க தலீவருக்கு பாட்டா !!!!!!!!

said...

:)
:)
:)
:
)
)
:

said...

வெந்துச்சா வேகலையா!?

said...

அந்த மரத்து மேல ஆடறவருக்கும் கீழ நெருப்பு வைப்பாங்களா மாமா? கீழன்னா 40 அடிக்கு கீழ தரைலைன்னு அர்த்தம்.. தப்பா புரிஞ்சிக்கக் கூடாது..

said...

அய்யோ.... அய்யோ...

said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Anonymous said...

Face Reaction கூட அடியில நெருப்பு வச்ச மாதிரிதான் இருக்கு...ஒரே தமாசு....

said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .